வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்.
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் வடகிழக்கு பருவமழையின்போது பயிர்களைப் பாதுகாக்க உரிய வடிகால் வசதிகள் ஏற்படுத்துதல், பயிர்க் காப்பீடு செய்தல், நீர் தேங்குவதைத் தவிர்த்தல், மரங்களுக்கு முட்டுக் கொடுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், வாழை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள், பசுமைக் குடில்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.