தீபாவளி பண்டிகை: இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உணவுப் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் கட்டாயம் FSSAI உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உணவுப் பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரித்தல், தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்துதல், காலாவதி தேதி மற்றும் தயாரிப்பு தேதியைக் குறிப்பிடுதல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல் உள்ளிட்ட உணவுப் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் FSSAI உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு தொடர்பான புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.