தீபாவளி சிறப்புப் பேருந்துகள் – கோவையிலிருந்து 2,895 பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோயம்புத்தூரிலிருந்து 05.11.2026 முதல் 08.11.2026 வரை 2,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், கடந்த ஆண்டை விட கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். ஏழு முக்கியப் பேருந்து நிலையங்களிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கொடிசியா வளாகத்திலிருந்து இயக்கப்படும். முன்பதிவு செய்த பயணிகளுக்கான பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள எல்&டி மைதானத்தில் நிறுத்தப்படும். பயணிகளின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு, மழைக்காலத் தற்காலிகக் கூடாரங்கள் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புகார்களுக்கு 1077 / 0422-2306051 என்ற எண்களிலும், ஆம்னி பேருந்துகள் தொடர்பான புகார்களுக்கு 9384808302 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.