தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கொடிசியா மைதானத்தில் பயணிகளை ஏற்றி இறக்க ஏற்பாடு – கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், நவம்பர் 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் பயணிகளை ஏற்றி இறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிடம், நிழற்குடை மற்றும் மின்வசதிகள் ஏற்படுத்தவும், கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.