மாசற்ற தீபாவளியைக் கொண்டாட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
வெளியிடப்பட்ட தேதி : 04/11/2026
மாண்புமிகு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குறைந்த ஒலி மற்றும் குறைந்த காற்று மாசு ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளைத் தவிர்க்கவும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாக்க, பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றி மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.