தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூரில் ரூ.100-க்கு “வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு” விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 05/11/2026
கோயம்புத்தூர் மாவட்டம், வடகோவை, சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில், கூட்டுறவுத்துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, ரூ.100/-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய “வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு விற்பனையை இன்று (05.11.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

