“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அன்னூர் வட்டத்தில் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 11/11/2026
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், 18.11.2026 காலை 9.00 மணி முதல் 19.11.2026 காலை 9.00 மணி வரை அன்னூர் வட்டத்தில் முகாம் நடைபெற உள்ளது.

இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் அன்னூர் வட்டத்திலுள்ள 30 வருவாய் கிராமங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு, அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெறுவார்கள். மேலும், 18.11.2026 அன்று மாலை 4.00 மணிக்கு அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களை அளிக்கலாம்.

பொதுமக்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது குறைகளைத் தெரிவித்து, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 442KB)