ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2026–2027 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 60 வயதுக்குட்பட்ட தகுதியான பெண்கள் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். கறவை மாடுகள் இல்லாத, கால்நடைகளைப் பராமரிப்பதற்கான போதிய வசதிகளைக் கொண்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறிப்பாக, ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு 30% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியான பெண்கள், தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையத்தை அணுகி, பரிந்துரைக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் 15.11.2026 முதல் 05.12.2026 வரை விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.