கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2026–2027 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டார கிராம ஊராட்சிகளில் நிரந்தரமாக வசிப்பவர்களாகவும், வேறு கால்நடைகள் வைத்திருக்காதவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வழங்கப்படும் ஆடுகளை இரண்டு ஆண்டுகள் பராமரிக்க உறுதியளிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு 30% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியான பெண்கள், தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையத்தை அணுகி, பரிந்துரைக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் 15.11.2026 முதல் 05.12.2026 வரை விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 347KB)