அத்தியாவசியப் பொருட்களுக்கு இருப்பு வரம்புகள் நிர்ணயம் மற்றும் இருப்பு விவரங்களைத் தொடர்ந்து அறிவிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு
வெளியிடப்பட்ட தேதி : 17/11/2026
தமிழ்நாடு அரசு, 1955-ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 3-இன் கீழ், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி / நெல் மற்றும் சர்க்கரை ஆகியவற்றுக்கு இருப்பு வரம்புகளை நிர்ணயித்தும், இருப்பு விவரங்களைத் தொடர்ந்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கட்டுப்பாட்டு ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. இந்த ஆணைகள், இந்திய அரசின் முன் இசைவுடன், அரசிதழ் எண்கள்.486,487 நாள்.13.11.2026-இல் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய அரசிதழின் படி சர்க்கரைக்கு மறு பதிப்பு அரசிதழ் எண் 490, நாள் 13.11.2026 -இல் வெளியிடப்பட்டுள்ளது.