கோயம்புத்தூர் மாவட்டத்தில் “இரத்த சோகை இல்லாத கிராமம்” சிறப்புப் பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள், பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 19/11/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையைத் தடுக்கும் நோக்கில், “இரத்த சோகை இல்லாத கிராமம்” சிறப்புப் பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள், பாரம்பரிய உணவுத் திருவிழா ஆகியவை 19.11.2026 முதல் 27.11.2026 வரை ஊராட்சி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்பும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகுகளைத் தொடர்புகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

(PDF 83KB)