வாக்காளர் பட்டியலின் சிறப்புச் சுருக்க முறைத் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| வாக்காளர் பட்டியலின் சிறப்புச் சுருக்க முறைத் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் | கோயம்புத்தூர் மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலின் சிறப்புச் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் 12.11.2026 முதல் 11.12.2026 வரை நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களின் வசதிக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 1,067 வாக்குச்சாவடி மையங்களிலும் 21.11.2026 (சனிக்கிழமை), 22.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இச்சிறப்பு முகாம்களில், வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் வாக்குச்சாவடி மைய அலுவலர்களாக (Designated Location Officers – DLOs) பணியாற்றுவார்கள். மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் (Booth Level Officers – BLOs) முகாம்களில் பணியில் இருப்பார்கள். 18 வயது பூர்த்தியடைந்த முதல் முறை வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள தகுதியான வாக்காளர்கள், தங்களது வீட்டிற்கு அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று, கீழ்க்கண்ட பணிகளுக்கான உரிய விண்ணப்பப் படிவங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான விண்ணப்பப் படிவங்களை அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். |
21/11/2026 | 29/11/2026 | பார்க்க (426 KB) |