வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் | தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், ஊரக மகளிரின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 5 செம்மறி ஆடுகள் / வெள்ளாடுகள், 2 ஆண்டுகளுக்கான காப்பீடு, போக்குவரத்து மற்றும் தீவனச் செலவிற்காக ரூ.2,500/- மற்றும் ஓராண்டிற்குப் பிறகு ரூ.2,000/- ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. 18 முதல் 60 வயதிற்குட்பட்ட தகுதியுடைய ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர், திருநர்கள் மற்றும் குறிப்பிட்ட தகுதியுடைய மாற்றுத்திறனாளி மகளிர் விண்ணப்பிக்கலாம். இணையதளம்: https://tnahschemes.tn.gov.in |
27/11/2026 | 17/12/2026 | பார்க்க (52 KB) |