ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் | தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், ஊரக மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் 100% மானியத்தில் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.50,000/- மதிப்புள்ள ஒரு கறவை மாடு, 2 ஆண்டுகளுக்கான காப்பீடு மற்றும் போக்குவரத்து மற்றும் உடனடி தீவனச் செலவிற்காக ரூ.3,000/- வழங்கப்படும். 18 முதல் 60 வயதிற்குட்பட்ட தகுதியுள்ள மகளிர் மற்றும் திருநர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இணையதளம்: https://tnahschemes.tn.gov.in |
27/11/2026 | 17/12/2026 | பார்க்க (50 KB) |