வெற்றிப்படித் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி – 2026–2027
2026–2027-ஆம் நிதியாண்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வெற்றிப்படித் திட்டத்தின் கீழ், ICT Academy மூலம் மென்பொருள், இணையதள உருவாக்கம், தரவுப் பகுப்பாய்வு, நுண்நிதி மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், 18 முதல் 35 வயதிற்குட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். மேலும், துறை சார்ந்த கல்வித் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்குச் சான்றிதழுடன் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும்.
விருப்பமுள்ளவர்கள் www.tnadw.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.