மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை சந்தையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கான நேரடி விற்பனை மையமான இயற்கை சந்தையினை (Natural Bazaar) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.11.2026) திறந்து வைத்து பார்வையிட்டார்.

