2025–2026-ஆம் ஆண்டிற்கான கோயம்புத்தூர் மாவட்ட புள்ளியியல் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (26.11.2026), 2025–2026-ஆம் ஆண்டிற்கான கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு துறைகள் சார்ந்த வளர்ச்சி மற்றும் புள்ளிவிவரத் தகவல்களை உள்ளடக்கிய “கோயம்புத்தூர் மாவட்ட புள்ளியியல் கையேட்டினை” மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார். இக்கையேட்டினை தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் முதன்மைச் செயலர் / ஆணையர் திரு. சத்யபிரதா சாஹூ, இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார்.
