Close

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம்,
1422, தடாகம் ரோடு,
GCT அஞ்சல், கோவை- 641013.

e-mail: ddhcoimbatore@yahoo.com
தொலைபேசி: 0422 – 2453578 / 9443366250

திருமதி. மா.புவனேஸ்வரி
தோட்டக்கலை துணை இயக்குநர்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதற்கும் ,மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும், நோக்கத்துடன் விவசாயிகளுக்கு பரப்பளவு,உற்பத்தி,உற்பத்தித்திறனை அதிகரிப்பதை தோட்டக்கலைத் துறை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பணி:

1.புதுமையான தொழில் நுட்பங்களின மூலம் தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.

2.தோட்டக்கலை பயிர்கள் மூலம் நுகர்வோருக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பு வழங்குதல்.

3.எல்லா வயதினருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் உணவுப் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது.

  1. வேலை வாய்ப்பினை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
  2. தோட்டக்கலை தொழில் முனைவோராக மாற இளைஞர்களை ஊக்குவித்தல்.

6..வீட்டுத் தோட்டங்கள்,பூங்காக்கள் அமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்:

  1. தோட்டக்கலை ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பணி – தேசிய தோட்டக்கலை இயக்கம்(MIDH- NHM)
  2. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் (NADP)
  3. RKVY – PDMC
  4. 5. மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம்- ஒருங்கிணைந்த பண்ணையம் (RAD-IFS).
  5. மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் (SHDS)
  6. தமிழ்நாடு நீர்ப்பாசன விவசாய நவீன மயமாக்கல் திட்டம் (TNIAMP)
  7. பிரதான் மந்திரி ஃபாசல் பிம யோஜனா (PMFBY) – பயிர்காப்பீடு திட்டம்

9.அரசு தோட்டக்கலை பண்ணைகள் (State Horticulture Farms)

10.டான்ஹோடா – நேரடி விற்பனை மையம் (TANHODA Retail outlet centre)

1) தோட்டக்கலை ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான இயக்கம்; –தேசிய தோட்டக்கலை இயக்கம்;(MIDH-NHM)

) பகுதி விரிவாக்க திட்டம்

  1. வீரிய காய்கறிகளின் சாகுபடி (கத்திரிக்காய், தக்காளி மற்றும் மிளகாய்) – குழிதட்டு நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவச விலையில் ஒரு ஹெக்டருக்கு ரூ. 20,000 மான்யம் வழங்கப்படுகிறது.
  2. முருங்கை நாற்றுகள் ஒரு ஹெக்டேருக்கு ரூ10,000 வீதம் வழங்கப்படுகிறது.
  3. மா அடர் நடவுவின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு ரூ 9840 மானியம் வழங்கப்படும்.
  4. மலர் பயிர் சாகுபடி: செண்டுமல்லி (Marigold) குழிதட்டு நாற்றுகள் ரூ. 16,000/ ஹெக்டேருக்கும்,சம்பங்கி (Tube Rose) ரூ. 60,000/ ஹெக்டேருக்கு விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்
  5. மிளகாய் (Spices) சாகுபடிக்கு ரூ. 12,000 ற்கு குழிதட்டு நாற்றுகள், ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும்.
  6. கோகோ சாகுபடிக்கு,ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 12,000 மதிப்புள்ள செடிகள் வழங்கப்படும்.

) பாதுகாக்கப்பட்ட பயிர் சாகுபடி

  1. பசுமைக்குடில் – பசுமைக்குடில் அமைக்க ஒரு சதுரமீட்டர்க்கு ரூபாய் 467.50 வீதம் 50% மானியமhக ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 4000 சதுர மீட்டர் வழங்கப்படும்.
  2. நிழல்வலை கூடாரம்: பசுமைக்குடில் கட்டுமானத்தைப் போலவே,ஒரு சதுரமீட்டருக்கு ரூபாய் 355 வீதம் 50% மானியமhக ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 4000  சதுரமீட்டர் வழங்கப்படும்
  3. நிலப்போர்வை: பின்னேற்பு மானியமாக ரூ. 16,000 – 50% மானியமhக வழங்கப்படும்
  4. நீர்சேமிப்பு கட்டமைப்பு: நீர்சேமிப்பு கட்டமைப்பு அமைக்க ரூ.75000 அல்லது ஒரு யூனிட்டிற்கு புரோ ரேட்டா அடிப்படையில் வழங்கப்படும்.

) ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை / பூச்சி மேலாண்மை (INM/IPM)

1.பயிர் சாகுபடியில் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணிய ஊட்டச்சத்துக்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ1200க்கு உயிர் உரங்கள் வழங்கப்படும்

) இயற்கை வேளாண்மை (Organic Farming)

1.இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ 4000 மானியமாக வழங்கப்படும்.

) தேனீவளர்ப்பு

  1. தேனீ உற்பத்தியை அதிகரிக்க – தேனீ காலனி அமைக்க 40% மானியமாக ரூ 1600 வழங்கப்படும் மற்றும் தேன் பிரித்தெடுக்க ரூ. 8,000 வழங்கப்படும்.

) தோட்டக்கலை இயந்திரமயமாக்கல்

1.20HP டிராக்டர் 25% மானியத்தில் ரூ.75,000 மானியமாக வழங்கப்படும்.

) ஒருங்கிணைந்த அறுவடைக்கு பின் மேலாண்மை

சிப்பம் கட்டும் அறைகளை அமைக்க 50% மானியமாக ரூ.2.00 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

2) தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் (NADP)

1.தக்காளி போன்ற பயிர்களுக்கு தாங்கு குச்சி போன்ற சிறப்பு அமைப்புகள் அமைப்பதற்கு மானியமாக ரூ.25000/ எக்டர் வழங்கப்பட்டு வருகின்றது.

  1. நிரந்தர பந்தல் அமைக்கரூ .2.00 இலட்சம் ஒரு ஹெக்டேருக்கு மானியமாக வழங்கப்படும்.

3) RKVY-PDMC

இந்த திட்டத்தின் கீழ்,சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியம்

மற்றும் பெரிய விவசாயிகளுக்கு 75% மானியம் ஆகியவற்றின் நிதி உதவி மூலம் நுண்ணீர் பாசன வசதியை அமைக்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.ஒரு பயனாளி (75%) வரை நிதி உதவிபெற முடியும்.ஏற்கனவே பயனடைந்த விவசாயிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிப்பதற்கான மானியத்தையும் பெறலாம்.சொட்டு நீர்ப்பாசன முறையின் கீழ் பிரதான குழாயை நிறுவும் போது குழி எடுப்பதற்கு ரூ.3,000 / ஹெக்டேர் ஊக்குத் தொகை வழங்கப்படும்.

4) துணை நீர் மேலாண்மை நடவடிக்கைகள் (SWMA)

இதில், தரைமட்ட நீர் சேமிப்பு கட்டமைப்புகளுக்கு (ரூ .40,000) பாதுகாப்பான ஃபிர்காக்களில் போர்வெல்களை அமைக்க (ரூ .25,000), PVC குழாய்கள்

(ரூ .10000) மற்றும் மின்சார மோட்டார்கள் / டீசல் பம்ப்செட்டுகள் ( ரூ .15000) வழங்கப்படும்.

5) மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம் (RAD) – ஒருங்கிணைந்த விவசாய முறை (IFS)

தோட்டக்கலைஅடிப்படையிலான விவசாய முறை – ரூ. 5000 / ஹெக்டேர் ஊடுப் பயிர் மற்றும் பிரதான பயிருக்கு வழங்கப்படும்

பால் மாடு / எருமை (1 எண்), ஆடு  வாங்குவதற்கு – ரூ. 15,000 / அலகு வழங்கப்படும்

மண்புழு உர படுகை அமைக்க ரூ. 8000/ அலகு வழங்கப்படும்.

தேனீ வளர்ப்பு காலனி நிறுவுவதற்கு – ரூ.1200 வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ. 30,000 / அலகு வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் பட்டியல் சிறு/குறு இன விவசாயிகளுக்க 20% கூடுதல் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.

6)மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம்

ஊட்டச்சத்து பாதுகாப்பின் முக்கியம் கருதி வீடுதோறும் வீட்டுத்தோட்டம் அமைக்க ஊக்குவிக்கும் பொருட்டு மாடித் தோட்ட தளைகள், காய்கறி விதை தளங்கள் மற்றும் ஊட்டச்சத்து தோட்டத் தளைகள் மானிய விலையில் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் உயர் தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலை பயிர்களை வீட்டில் வளர்க்க ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் செங்குத்துத் தோட்டம் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகின்றது,

பெண் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்ட காளான் வளர்ப்பு குடில் நிறுவ பின்னேற்பு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.

உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தினை அதிகரிக்க உழவர் சந்தை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி பரப்பினை அதிகரிக்க இடுப்பொருட்கள் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.

தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியினை அதிகரிக்க பண்ணை கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றது.

தென்னை தோப்பு மற்றும் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களுக்கு ஊடுப்பயிர் சாகுபடியினை அதிகரித்து நிரந்தர வருமானம் ஈட்ட ஊடுபயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்:

.எண் பெயர் பதவி முகவரி தொலைபேசிஎண்

 

1 திருமதி.மா.புவனேஸ்வரி தோட்டக்கலை துணை இயக்குநர் 8,தடாகம்ரோடு,

GCT Post,

கோவை – 13

0422 – 2453578

9443366250

 

2 திருமதி. ம.நந்தினி தோட்டக்கலைஉதவிஇயக்குநர்

(நடவுபொருள்)

8,தடாகம்ரோடு,

GCT Post,

கோவை – 13

0422 – 2453578

7708917292

வட்டார அலுவலர்களின் தொலைபேசி எண்கள்

.

எண்

வட்டாரம் பெயர் பதவி முகவரி தொலை

பேசி எண்

1 ஆனைமலை திரு.கோபிநாத் தோட்டக்கலை உதவி இயக்குநர் தோட்டக்கலை உதவி இயக்குநர்,

விவசாய விரிவாக்க மையம்,யூனியன் அலுவலக வளாகம், ஆனைமலை – 642104

04253-282977

 

2 அன்னூர் திருமதி.கோமதி தோட்டக்கலை உதவி இயக்குநர் தோட்டக்கலை உதவி இயக்குநர் ,விவசாய விரிவாக்க மையம்,யூனியன் அலுவலக வளாகம், அன்னூர்- 641653. 04254-264468

 

3 காரமடை திருமதி.சுசீந்திரா தோட்டக்கலை உதவி இயக்குநர் தோட்டக்கலை உதவி இயக்குநர் ,விவசாய விரிவாக்க மைய வளாகம்,

தாலுகா அலுவலகத்தின் பின்னால் சிறுமுகை சாலை,

மேட்டுப்பாளையம் -641301.

9486590155

 

4 கிணத்துக்கடவு திருமதி. ஜமுனாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர், யூனியன் அலுவலக வளாகம்.

கிணத்துக்கடவு -642109

9585665505
5 மதுக்கரை திரு. எஸ்.சுரேஷ் தோட்டக்கலை உதவி இயக்குநர் தோட்டக்கலை உதவி இயக்குநர் பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகம்,

பாலகாடு மெயின் ரோடு

மதுக்கரை.

9894163887
6 பெரியநாயக்கன்பாளையம் திருமதி.சௌமியா தோட்டக்கலை உதவி இயக்குநர் தோட்டக்கலை உதவி இயக்குநர் பஞ்சாயத்து தொழிற் சங்க லுவலகத்திற்கு

அருகில் (எல்.எம்.டபிள்யூ அருகில்) பெரியநாயக்கன்பாளையம்,

கோவை.

04222 -693511

 

7 பொள்ளாச்சி

(தெற்கு)

திருமதி.வசுமதி தோட்டக்கலை உதவி இயக்குநர் தோட்டக்கலை உதவி இயக்குநர்,தொகுதி மேம்பாட்டு அலுவலகத்தின் பின்புறம் பொள்ளாச்சி தெற்கு பாலக்காடுசாலை,

பொள்ளாச்சி

9443059186
8 பொள்ளாச்சி

(வடக்கு)

திரு.ராதாகிருஷ்ணன் தோட்டக்கலை உதவி இயக்குநர் தோட்டக்கலை உதவி இயக்குநர் உழவர் மையம் ரெகுலேட் மார்க்கெட்டிங் ஆபீஸ் ம்பௌண்ட்,மீன்கரை ரோடு,பொள்ளாச்சி. 04259 – 222666

 

9 எஸ்.எஸ்.குளம் திருமதி.மதுபாலா தோட்டக்கலை உதவி இயக்குநர் தோட்டக்கலை உதவி இயக்குநர் விவசாய விரிவாக்க மையம்

பஞ்சாயத்து தொழிற்சங்க அலுவலகம் அருகே,

எஸ்.எஸ்.குளம்

கோவை –6410107

0422-653506

 

10 சுல்தான்

பேட்டை

திரு.ரமேஷ் தோட்டக்கலை உதவி இயக்குநர் தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை மற்றும் தோட்டபயிர்கள் துறை யூனியன் அலுவலக வளாகம் சுல்தான்பேட்டை தொகுதி சுலூர் தாலுக்கா

கோவை -641669.

9786773359
11 சூலூர் திருமதி. சித்ரபானு தோட்டக்கலை உதவி இயக்குநர் தோட்டக்கலை உதவி இயக்குநர் கால்நடை மருத்துவமனை வளாகம்

நீதிமன்ற வளாகத்திற்கு அருகில், ரயில்வே ஊட்டி சாலை, சுலூர் -641402.

0422-2688022

 

12 தொண்டாமுத்தூர் திருமதி.நந்தினி தோட்டக்கலை உதவி இயக்குநர் தோட்டக்கலை உதவி இயக்குநர், பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகம்,மhதம்பட்டி சாலை

தொண்டமுத்துர் -641109

0422 -2618890

 

 

 

 

அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலர்களின் விபரங்கள்

 

.

எண்

பெயர் பதவி முகவரி தொலைபேசி

எண்

1 திருமதி. கல்பனா தோட்டக்கலை

அலுவலர்

ஆனைக்கட்டி

தோட்டக்கலை அலுவலர்

மாநில தோட்டக்கலை பண்ணை,ஜம்புகண்டி பிரிவு,ஆனைக்கட்டி – 641108.

8072294408
2 செல்வி. ஜனனி ரிதன்யா தோட்டக்கலை

அலுவலர்

கண்ணம்பாளையம்

மாநில தோட்டக்கலை பண்ணை,

கண்ணம்பாளயம்,

சுலூர் -641402

9486212562

6374684029

 டான்ஹோடா நேரடி விற்பனை மையம்

.எண் பெயர் பதவி முகவரி தொலைபேசி எண்

 

1 திருமதி.சூர்யபிரியா தோட்டக்கலை உதவி இயக்குநர்

(சிறப்பு பணி)

8,தடாகம்ரோடு,

GCT Post,

கோவை – 13

9751144770

கோயமுத்தூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி 1,25,000 ஹெக்டேர் ஆகும்.இதில் தென்னை (91,809 ஹெக்டேர்)தேயிலை (11,194 ஹெக்டேர்) பாக்கு (2,781 ஹெக்டேர்) வாழை (9,122 ஹெக்டேர்) மா (2,484 ஹெக்டேர்) தக்காளி (1,843 ஹெக்டேர்) சின்ன வெங்காயம் (1,329 ஹெக்டேர்) கறிவேப்பிலை (1,145 ஹெக்டேர்) பந்தல்காய்கறிகள் (648 ஹெக்டேர்) கத்திரிக்காய் (431 ஹெக்டேர்) வெண்டை (519 ஹெக்டேர்) சாகுபடி செய்யப்பட்டுவருகின்றது.

தோட்டக்கலை பயிர்களின் பங்கு

.எண் பயிர் பயிரிடப்படும்

பரப்பு (எக்டர்)

1 தென்னை 91809
2 வாழை 9122
3 தேயிலை 11194
4 பாக்கு 2781
5 மா 2484
6 தக்காளி 1843
7 வெங்காயம் 1329
8 கறிவேப்பிலை 1145

 

1.25 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்படும், தோட்டக்கலைபயிர்களhல், ஒரு ஆண்டுக்கு சராசரியாக 11.36 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

ஏறத்தாழ அனைத்து தோட்டக்கலை பயிர்களும் சாகுபடிசெய்ய கோவை மாவட்டத்தின் நிலை சாதகமாக உள்ளது.

தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய, இடுபொருட்கள், பயிர் தொழில்நுட்பம், மற்றும் சந்தை ஆகியவை எளிதாய் கிடைக்க பெறுகின்றன. எனவே, கோவை மாவட்ட தோட்டக்கலை பயிர்கள்,மாநில உற்பத்தியில் பெறும் பங்கு வகிகின்றது.

மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தி சீராக அதிகரித்து வருகிறது.மேலும் இங்கு விளையப் பெறும் தோட்டக்கலை பொருட்கள் ஏற்றுமதிக்கு வித்திடுகிறது.

வேளாண் பயிர்களை காட்டிலும் குறைந்த பரப்பில் மிகுந்த இலாபம் காண்பதால் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை ஆர்வமுடன் பயிரிட்டு பயனடைகின்றனர்.