Close

மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 09/08/2024
2024080933-scaled.jpg

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 9.8.2024 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மாணவர்களுக்கு பற்று அட்டைகளை (Debit Card) வழங்கினார்கள். இவ்விழாவில், மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. சு.முத்துசாமி, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  திருமதி பி.கீதா ஜீவன், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் திருமதி ஆர். ரங்கநாயகி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. கணபதி ராஜ்குமார், திரு. கே. ஈஸ்வரசாமி, சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளீதரன், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.(PDF 330KB) 2024080940-scaled.jpg