Close

மாவட்டம் பற்றி

கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம், நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராஷ்டிரகுட்டர்கள் , சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள் மற்றும் விஜயநகர பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. கொங்கு நாடு, தென்னிந்தியாவோடு பிரிட்டிஷாரின் கைகளில் விழுந்த பொழுது இதன் பெயர் கோயம்புத்தூர் என மாற்றப்பட்டது. தற்பொழுதும் இதே பெயரில் அழைக்கப்படுகிறது. தமிழில் இந்த ஊர் கோவை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின், மழை சாரல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு மனதிற்கு இதம் அளிக்கின்ற கால நிலை வருடம் முழுவதும் நிலவுகிறது. 25 கி.மீ நீளமுள்ள பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் குளிர்ந்த காற்று இதன் பருவ நிலைக்கு காரணமாக அமைகிறது. இங்கு அதிகமாக உள்ள கரிசல் மண் இந்த பகுதியில் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் சிறந்து விழங்க ஒரு காரணியாக அமைந்துள்ளது. மேலும் இங்கு வெற்றிகரமாக விளங்கும் பருத்தி விளைச்சல், நெசவு தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. முதல் நெசவு நூற்ப்பாலை 1888 ல் அமைக்கப்பட்டது. தற்போது இங்கு நூற்றுக்கும் அதிகமான நூற்ப்பாலைகள் இயங்கி வருகின்றது. இதன் விளைவாக நிலையான பொருளாதாரம் மற்றும் கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்ப்பாலை நகரமாக உருவெடுக்க காரணமாக அமைந்தது. இங்கு 25000க்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகள் மற்றும் நுhற்பாலைகள் உள்ளன. கோயம்புத்தூர் நீர் ஏற்றுக் குழாய் மற்றும் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகளின் சிறந்த உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930ல் பைகாரா நீர்மின் திட்டம் செயல்பட தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது.

கோயம்புத்தூர் மாவட்டம் அண்டை மாநிலமான கேரளத்திற்க்கும் புகழ்மிகுந்த உதக மண்டலத்த்திற்க்கும் நுழைவு மற்றும் முடிவு வாயிலாக அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்திருந்து இயங்கும் புகழ்ப்பெற்ற மலை இரயில் இங்கிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து ஊட்டிக்கு வழக்கமான பேருந்து போக்குவரத்துகள் உள்ளன.