அக்டோபர் 6-ஆம் தேதி பெரியநாயக்கன்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து 25 இடங்களில் சிறப்பு மெகா முகாம்களை நடத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, 06.10.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகம், உள்விளையாட்டு அரங்கம், கேட் எண்.10-ல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், இலவச அறுவை சிகிச்சைக்கான பயனாளிகளைத் தேர்வு செய்தல், உதவி உபகரணங்கள், கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, பேருந்து அட்டை பதிவு மற்றும் பல்வேறு அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் பெறுதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், ஆதார் மற்றும் குடும்ப அட்டை திருத்தங்களும் மேற்கொள்ளப்படும்.

பெரியநாயக்கன்பாளையம் மற்றும் கூடலூர் வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மட்டும் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

(PDF 683KB)