ஆகமக் குழுவினால் கண்டறியப்பட்ட திருக்கோயில்கள் குறித்த பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 25 வரை நீட்டிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 04/11/2026

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 23.10.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆகமக் குழுவால் பரிசீலிக்கப்பட்ட திருக்கோயில்கள் குறித்த விவரங்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை 05.11.2026 முதல் 25.11.2026 வரை தெரிவிக்கலாம்.

தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை www.hrce.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ 25.11.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

(PDF 224KB)