ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட விழிப்புணர்வு முகாம்கள்
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளிம்புநிலை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின், குறிப்பாக படித்த இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தவும், அதிக அளவில் பெண்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கவும், தாட்கோ சார்பில் மாவட்டத்தின் 162 குக்கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இம்முகாம்களில் தொழில்முனைவோருக்கான கடனுதவி, சுயவேலைவாய்ப்புப் பயிற்சி, கல்விக் கடனுதவி, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், தாட்கோ, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம் மற்றும் வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.
எனவே, அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, கோயம்புத்தூர் – 641018 என்ற முகவரியிலும், 0422-2240111 / 9976774492 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.