ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 90% மானியத்தில் விரைவு மின் இணைப்பு வழங்கும் வளமிகு வேளாண்மை உதவித் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 04/11/2026

2026–2027 ஆம் நிதியாண்டில் தாட்கோ மூலம் ஆதிதிராவிட விவசாயிகளின் பாசன வசதி, வேளாண் உற்பத்தி மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் வளமிகு வேளாண்மை உதவித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1,000 விவசாயிகளுக்கு தட்கல் மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு அரசு ரூ.26.09 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தில் 5 HP முதல் 15 HP வரையிலான மின் மோட்டார்களுக்கான மின் இணைப்புக் கட்டணத்தில் 90% தொகையை தாட்கோ மானியமாக வழங்கும். பயனாளிகள் மீதமுள்ள 10% தொகையை மட்டும் செலுத்த வேண்டும்.

தகுதிகள்:

  • விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • சொந்த விவசாய நிலம் மற்றும் அதற்கான பட்டா இருக்க வேண்டும்.

  • நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைந்திருக்க வேண்டும்.

  • தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி பதிவு செய்திருக்க வேண்டும்.

  • ஏற்கனவே தாட்கோ திட்டங்களின் கீழ் பயனடைந்தவராக இருக்கக்கூடாது.

தகுதியுடைய ஆதிதிராவிட விவசாயிகள் https://tahdco.com/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 64KB)