• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு மற்றும் ஒப்பணக்கார வீதி மேம்பாலம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்துவைத்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 09/08/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூரில் நடைபெற்ற விழாவில், ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு மற்றும் ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள உயிரி அறிவியல் மற்றும் சமூக அறிவியல் துறைக் கட்டடங்களை 9.8.2024 அன்று திறந்து திறந்துவைத்தார்கள்.இவ்விழாவில், மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. சு.முத்துசாமி, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் திருமதி ஆர். ரங்கநாயகி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. கணபதி ராஜ்குமார், திரு. கே. ஈஸ்வரசாமி, சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளீதரன், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 300KB)

2024080926-scaled.jpg