Close

அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செப்.8-ல் நடைபெறும்

வெளியிடப்பட்ட தேதி : 05/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து நடத்தும் சிறப்பு முகாம், 08.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இம்முகாமில் UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ், உதவி உபகரணங்கள், கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஆதார் மற்றும் குடும்ப அட்டை திருத்தங்கள் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படும்.

அன்னூர் வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மட்டும் இம்முகாமில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 306KB)