Close

இந்தியத் திறன் போட்டிகள் 2027 – பதிவு தொடக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 27/08/2026

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறவுள்ள உலகத் திறன் போட்டிகள் 2026-ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களைத் தேர்வு செய்வதற்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவுகள் தொடங்கியுள்ளன.

தமிழ்நாடு தொடர்ந்து இந்தியத் திறன் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்தியத் திறன் போட்டியில் தமிழ்நாடு ஒட்டுமொத்த தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்றதுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்கள் உலகத் திறன் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 முதல் 25 வயதுக்குட்பட்ட பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கல்வி நிறுவன மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர் 60-க்கும் மேற்பட்ட திறன் பிரிவுகளில் பங்கேற்கலாம்.

தகுதியுடையவர்கள் Skill India Digital – India Skills Competition இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம், கோயம்புத்தூர்–29, தொலைபேசி 9488462613 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 173KB)