Close

“உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம்: கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் ஆகஸ்ட் 19 முதல் முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 14/08/2026

தமிழ்நாடு அரசு, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் அவர்களின் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டவாறு, மக்களை நேரடியாக அணுகி அவர்களது குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வுகாணும் வகையில், அரசு இயந்திரமே களத்திற்கு வரும் “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வட்டத்தில் தங்கியிருந்து கள ஆய்வில் ஈடுபட்டு, அந்த வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்கிறார்.
இதன்படி, 19.08.2026 காலை 9.00 மணி முதல் 20.08.2026 காலை 9.00 மணி வரை கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் இம்முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

(PDF 63KB)