உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் – கிறித்துவ தேவாலய பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் – விண்ணப்பிக்க அழைப்பு
வெளியிடப்பட்ட தேதி : 23/06/2026
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
- விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை
- இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை
- ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை
- கல்வி உதவித்தொகை
- திருமண உதவித்தொகை
- மகப்பேறு உதவித்தொகை
- மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்
- முதியோர் ஓய்வூதியம்
மேற்படி நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறுவதை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் (www.uwb.tn.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது. இனி, தகுதியுடையவர்கள் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 304KB)