எல் நினோ பருவநிலை காரணமாக கால்நடை தீவனப் பற்றாக்குறையைத் தவிர்க்க நெல் வைக்கோலைப் பாதுகாக்க விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் – கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
வெளியிடப்பட்ட தேதி : 13/11/2026
எல் நினோ பருவநிலை காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் வருங்காலங்களில் கால்நடை தீவனப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் நெல் வைக்கோலைப் போதுமான அளவு சேகரித்து, பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், வைக்கோலை எரிப்பது, வீணாக்குவது மற்றும் பிற வணிகப் பயன்பாடுகளுக்கு, குறிப்பாக பொதி கட்டுவதற்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs), சுய உதவிக்குழுக்கள் (SHGs), பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் உபரி வைக்கோலைச் சேகரித்து சேமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.