Close

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள்: செப்டம்பர் 5-ஆம் தேதி அமைச்சர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, 05.09.2026 அன்று காலை 9.00 மணிக்கு, கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விடுதலைப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

(PDF 57KB)