குடும்ப அட்டை தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம் 19.09.2026 அன்று நடைபெறுகிறது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெற்றுப் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 2026 மாதத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் 19.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை பெறுதல், அலைபேசி எண் மாற்றம் மற்றும் குடும்பத் தலைவரின் புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.
எனவே, குடும்ப அட்டை தொடர்பான குறைகள் மற்றும் கோரிக்கைகள் உள்ள பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை இம்முகாமில் அளித்து உரிய தீர்வு பெற்றுப் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.