குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் 05.11.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026

தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறை சார்பில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், தொழில் முனைவோர்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள பொதுமக்கள் வங்கிக் கடனுதவி பெறுவதை எளிதாக்கும் வகையிலும், 05.11.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் (Credit Outreach Programme)நடத்தப்படவுள்ளது.

(PDF 325KB)