கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறலாம்
கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதிர்கன்னிகள் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறலாம்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உடல்நல ஆலோசனைக்கான சிறப்பு முகாம் 15.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 12 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கோவை மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களில் நடைபெறுகிறது.
தகுதியானவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விதவை/கணவரால் கைவிடப்பட்டதற்கான சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.