கோட்டூர் மற்றும் ஆனைமலையில் 01.10.2026 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கோவை மண்டலத்தின் கீழ் கோட்டூர் மற்றும் ஆனைமலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 01.10.2026 முதல் செயல்பட உள்ளன. இவை காலை 9.30–மதியம் 1.30 மணி மற்றும் பிற்பகல் 2.30–மாலை 6.30 மணி வரை செயல்படும்.
சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750 மற்றும் பொதுரக நெல்லுக்கு ரூ.2,600 வழங்கப்படும். விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல், ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடன் கொள்முதல் நிலையங்களில் e-DPC மூலம் இலவசமாக பதிவு செய்யலாம்.
பதிவு முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தொகை 48 மணி நேரத்திற்குள் ECS மூலம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். நெல் கொள்முதல் தொடர்பான புகார்களுக்கு 18005993540 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளலாம்.
விவசாயிகள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.