கோயம்புத்தூரில் அக்டோபர் 8-ஆம் தேதி முதல் SSC-CHSL இலவச பயிற்சி வகுப்புகள்

வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) சார்பில் நடத்தப்படும் Combined Higher Secondary Level (CHSL) (10+2) தேர்வின் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 2,536 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கும்.

12-ஆம் வகுப்பு (+2) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 27 ஆண்டுகள் ஆகும். OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். விண்ணப்பிக்க 07.10.2026 கடைசி நாளாகும்.

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் 08.10.2026 முதல் SSC-CHSL போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன், வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.

இலவச பயிற்சியில் சேர விரும்புவோர், கோயம்புத்தூர், கவுண்டம்பாளையம் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம் அல்லது 9499055937 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 227KB)