கோயம்புத்தூரில் குழந்தைகள் நல மையங்களில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 31/08/2026
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், சித்தாபுதூர் அங்கன்வாடி மையங்கள், ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் கூர்நோக்கு இல்லம் மற்றும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம் ஆகியவற்றை தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவர் திருமதி. புதுக்கோட்டை விஜயா மற்றும் குழு உறுப்பினர்கள் திருமதி. ஸ்ரீ காவியா நாகராஜன், திருமதி. ஆர். ஜெயசுதா ஆகியோர் இன்று (31.08.2026) நேரில் பார்வையிட்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டனர்.
