கோயம்புத்தூரில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 1,266 பேருக்கு பணி நியமன ஆணைகள்
வெளியிடப்பட்ட தேதி : 22/08/2026
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரியில் உள்ள இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (22.08.2026) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் மற்றும் மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. க. விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, தேர்வு செய்யப்பட்ட 1,266 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.



