கோயம்புத்தூரில் வீட்டு வசதி வாரிய மனைகளின் மின்னணு ஏலம் – விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
கோவை மாவட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவை வீட்டு வசதி பிரிவின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பகுதிகளில் விற்பனையாகாமல் உள்ள வணிக மனைகள், கடை மனைகள், பொது உபயோக மனைகள் மற்றும் பள்ளி மனைகள் ஆகியவற்றை மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் மின்னணு ஏல முறையில் விற்பனை செய்வதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கால அவகாசம் 09.10.2026 அன்று காலை 11.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சிறப்புத் திட்டக்கோட்டம்–III, கோயம்புத்தூர் அலுவலகத்தின் கீழ் உள்ள பெரியநாயக்கன்பாளையம் மனை மேம்பாட்டுத் திட்டம் – நிலை II-ல் அமைந்துள்ள வணிகக் கடை மனையை மின்னணு ஏலத்தில் விற்பனை செய்வதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு காலக்கெடு 08.10.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் இணையதளம் மற்றும் தமிழ்நாடு அரசின் மின்னணு ஒப்பந்தப்புள்ளி இணையதளம் ஆகியவற்றில் காணலாம்.
இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.