கோயம்புத்தூரில் 14.11.2026 அன்று அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் 14.11.2026 அன்று காலை 07.00 மணிக்கு அண்ணா மிதிவண்டி போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி திரும்ப நேரு விளையாட்டு அரங்கத்தினை சுற்றி மீண்டும் நேரு விளையாட்டு அரங்கத்தில் வந்தடையும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை மாவட்டப் பிரிவு மூலமாக மிதிவண்டி போட்டிகள் நடத்தப்படவுள்ளது.