கோயம்புத்தூரில் 382 கள உதவியாளர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வை நடத்தும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்
வெளியிடப்பட்ட தேதி : 10/11/2026
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், கோவை மண்டலத்தில் கள உதவியாளர் பதவிக்கான 382 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு கோவை மின் வாரிய வளாகத்தில் 11.11.2026 முதல் 13.11.2026 வரை காலை 7.30 மணி முதல் நடைபெற உள்ளது. இப்பதவிக்கு அனுமதி கடிதம் பெறப்பட்ட நபர்கள் சரிபார்ப்பு பட்டியலின் படி அனைத்து ஆவணங்களுடன் நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் தவறாமல் உடற்தகுதித் தேர்வில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.