Close

கோயம்புத்தூரில் TNPSC குரூப் 2/2A இலவச பயிற்சி வகுப்புகள்

வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2026ஆம் ஆண்டிற்கான குரூப் 2/2A தேர்வு அறிவிப்பை 11.08.2026 அன்று வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 2 பதவிகளுக்கு 41 பணியிடங்களும், குரூப் 2A பதவிகளுக்கு 780 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் 09.09.2026 ஆகும்.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 01.09.2026 அன்று காலை 10.00 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்க உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி, நூலக வசதி, பாடவாரியான மற்றும் முழு மாதிரித் தேர்வுகள், இலவச பாடக்குறிப்புகள் மற்றும் படிப்பகம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், 25.08.2026 முதல் 27.10.2026 வரை பல்வேறு தேதிகளில் இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

இப்பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோர் மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் அருகிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம் அல்லது 9361576081 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 356KB)