கோயம்புத்தூர் இராமசாமி நகர் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா – மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/11/2026
PR.NO.49 - HONBLE BACKWARD WELFARE MINISTER - CHILDRENS DAY EVENT 001

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, பெரம்பூர் , கபிலர் தெருவிலுள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில், இன்று (13.11.2026) பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கும் விழாவை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி, இராமசாமி நகர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில்,
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் கலந்து கொண்டு, மாணவ மாணவியர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார்.

(PDF 231KB)

PR.NO.49 - HONBLE BACKWARD WELFARE MINISTER - CHILDRENS DAY EVENT 002 PR.NO.49 - HONBLE BACKWARD WELFARE MINISTER - CHILDRENS DAY EVENT 003