கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கான ஓவிய–சிற்பக் கண்காட்சி

வெளியிடப்பட்ட தேதி : 27/10/2026

கோயம்புத்தூர் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் சார்பில், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களின் படைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் ஓவிய–சிற்பக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இக்கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் கலைஞர்கள் தங்களது கலைப்படைப்புகள் மற்றும் தன்விவரக் குறிப்புகளுடன், உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், அரசு இசைக்கல்லூரி வளாகம், மலுமிச்சம்பட்டி, கோயம்புத்தூர் – 641050 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் கலைஞர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வீதம் தலா 7 கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0422-2610290, 7358628242 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

(PDF 225KB)