கோயம்புத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முன்னாள் பயிற்சியாளர்கள் நிலுவையிலுள்ள தொழிற்சான்றிதழ்களை 15.12.2026-க்குள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்
வெளியிடப்பட்ட தேதி : 10/11/2026
கோயம்புத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) 1991-ஆம் ஆண்டு முதல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்கள் இதுவரை பெற்றுச் செல்லாத தொழிற்சான்றிதழ்களை 15.12.2026-க்குள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறினால், சான்றிதழ்கள் அரசு ஆவணக் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். சான்றிதழ்களைப் பெற வரும்போது பயிற்சி பெற்றதற்கான ஆதார ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துவர வேண்டும். வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.