கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அட்டவணை அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், (Representation of the People Act, 1951) இன் பிரிவு 30 மற்றும் 56ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான தேதி மற்றும் நேரம் தொகுதிகளிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறும்.
மேலும், மாலை 06.00 மணிக்குள் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும், அவர்கள் வரிசையில் நின்றிருக்கும் நிலையில், வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
வாக்காளர்கள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தந்து, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) அல்லது இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 12 வகையான மாற்று அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் கொண்டு வந்து, சட்டம் மற்றும் ஒழுங்கை பேணியும், தேர்தல் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, நேரில் வாக்களிக்க இயலாத கீழ்க்கண்ட பிரிவு வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்தே வாக்கு செலுத்தும் (Home Votting) மற்றும் அஞ்சல் வாக்கு செலுத்தும் (Postal Ballot) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது:
- 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்
- மாற்றுத் திறனாளிகள் (PwD)
- அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்
- தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.
மேற்கண்ட பிரிவுகளில் உள்ள வாக்காளர்கள், நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவமான Form 12D/Form12 -இல் உரிய காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.
85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அஞ்சல் வாக்கு செலுத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வீடு தேடி சென்று வாக்கு பதிவு செய்யும் (Home Voting) முறையில் மேற்கொள்ளப்படும். இந்நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறும்.
எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குரிமையை தவறாது பயன்படுத்துமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 310 KB)