Close

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செப். 2026 முதல் சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள்

வெளியிடப்பட்ட தேதி : 31/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரை மொத்தம் 216 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் கோயம்புத்தூர் கோட்டத்தில் 144 முகாம்களும், பொள்ளாச்சி கோட்டத்தில் 72 முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

இம்முகாம்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கைமுறை கருவூட்டல், மலட்டுத்தன்மை சிகிச்சை, சினை சரிபார்ப்பு, ஆண்மை நீக்கம் மற்றும் சிறு அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு கால்நடை மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.

மேலும், கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் துறை வல்லுநர்களின் ஆலோசனைகள் வழங்கப்படும். ஏழை விவசாயிகளுக்கு தாது உப்பு கலவைகள் மற்றும் தீவன விதைகள் வழங்கப்படும்.

முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த விவரங்கள் அருகிலுள்ள கால்நடை நிலையங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தெரிவிக்கப்படும். விவசாயிகள் இம்முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 130KB)