கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 28/09/2026
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயில் இருந்து பாதுகாத்திட, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சினையுற்ற ஆடுகள் தவிர, 4 மாத வயதிற்கு மேல் உள்ள அனைத்து ஆடுகளுக்கும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.