கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறு மற்றும் குறு கால்நடை விவசாயிகளுக்கு மின்சாரப் புல் நறுக்கும் கருவி வழங்க 50% மானியத் திட்டம்
கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026- 2027 ஆம் ஆண்டில் சிறு மற்றும் குறு கால்நடை விவசாயிகளுக்கு மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவி 50% மானியத்துடன் திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. கால்நடை வளர்ப்போரிடையே பசுந்தீவன உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன், தீவன விரயத்தைக் கட்டுப்படுத்தவும், கால்நடைகளின் தீவன உற்பத்திச் செலவினைக் குறைத்து, கால்நடை வளர்ப்போரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
- பயனாளி சிறு அல்லது குறு கால்நடைவிவசாயியாக இருக்க வேண்டும்
- பயனாளி குறைந்தபட்சம் சொந்தமாக இரண்டு கறவை மாடுகள்/ எருமைகள் வைத்திருப்பவராக வேண்டும்.
- பயனாளி குறைந்தபட்சம்25 ஏக்கர் நிலம் தீவன சாகுபடி செய்யவைத்திருக்க வேண்டும்
- மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிநிறுவ உத்தேசிக்கப்பட்ட இடத்தில் போதுமானமின்சார வசதி இருக்க வேண்டும்.
- பயன்பெறும் பயனாளிகடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவொருஅரசு திட்டத்தின் கீழ் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிவாங்கி இருக்க கூடாது.
- அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இறுதி மானிய முறைக்கு உட்பட்டு, பயனாளி செலவின் 50% பயனாளி பங்களிப்பை வழங்குவராக இருக்க வேண்டும்.
- தகுதியுள்ள பயனாளிகளில், பெண் விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர் மற்றும் விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- தேர்ந்தெடுக்கும் பயனாளிகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் SC/ST பயனாளிகளுக்கு 30% ஒதுக்கீடு செய்யப்படும்.
மேற்கண்ட மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவி பெற விருப்பமுள்ள தகுதியானவிவசாய பயனாளிகள் இத்திட்டத்திற்கான அரசாணை பெறப்பட்டவுடன் பரிந்துரைக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பிட தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.