கோயம்புத்தூர் மாவட்டத்தில் 15.11.2026 அன்று அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026

மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறைஅமைச்சர் அவர்கள் பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 15.11.2026 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை மாவட்டப்பிரிவு மூலமாக நேரு விளையாட்டு அரங்கம் முன் துவங்கி எல்.ஐ.சி, அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு விளையாட்டு அரங்கத்தை வந்தடையுமாறு நடத்தப்படவுள்ளது. அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் இரண்டு பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்படவுள்ளது.

(PDF 237KB)